சனி அமாவாசையில் நிகழும் சூரிய கிரகணம்

0
440

விருச்சிக ராசியில் 4 கிரக சேர்க்கை: சனி அமாவாசையில் நிகழும் சூரிய கிரகணம், கிரகணம் வந்தாலே பலருக்கும் பயம்தான், சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ அது வானியல் நிகழ்வுதான். சூரிய கிரகணம் அமாவாசை நாளில் பகலிலும், சந்திர கிரகணம் பவுர்ணமி நாளில் இரவிலும் நிகழ்கிறது. விருச்சிக ராசியில் சூரியன், கேது, புதன், சந்திரன் இணைந்திருக்க நாளை சனி அமாவாசையில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த கிரகணத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

பிலவ வருடம் கார்த்திகை மாதம் 18 ஆம் தேதி டிசம்பர் 04, 2021ஆம் ஆண்டு சனிக்கிழமை கேட்டை நட்சத்திரத்தில் நிகழும் கேது கிரகஸ்த முழு சூரிய கிரகணம் இது இந்தியாவில் தெரியாது. வழக்கமாக சூரிய கிரகணம் நேரங்களில் கோவில்களில் நடை அடைக்கப்படும். இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் கோவில்களில் நடை அடைக்கப்படாது.

சூரிய கிரகணம் பற்றி ஜோதிட சாஸ்திரத்தில் பல முக்கிய விசயங்கள் கூறப்பட்டுள்ளன. சூரிய கிரகணம் ஏற்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட்டு விட வேண்டும். தோஷம் பிடித்துக்கொள்ளும் என்பதால் அவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. 7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 70 வயதுக்குட்பட்ட பெரியவர்களுக்கு விதி விலக்கு உண்டு. சாப்பிடாமல் இருக்க முடியாதவர்கள் திரவ உணவுகளை மட்டும் சாப்பிடலாம். கிரகணம் முடிந்த பின்னர் பதார்த்தம் செய்யவும்.

சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ எந்த கிரகணம் என்றாலும் வெறும் கண்ணால் பார்க்க கூடாது. கதிர்வீச்சுக்களால் கண்கள் பாதிக்கப்படும். கிரகணம் தொடங்கும் முன்பும் முடிந்த பின்னரும் கட்டாயம் குளிக்க வேண்டும். வீடுகளை கழுவி சுத்தம் செய்வது அவசியம்

கிரகண நேரத்தில் உறங்க கூடாது. கிரகணம் நிகழும் முன்பு தண்ணீர், வேக வைக்காத உணவுப்பொருட்கள், அரிசி போன்றவைகளில் தர்ப்பை புல்லை போட்டு வைக்க வேண்டும். இதன்மூலம் கிரகண தோஷம் ஏற்படாது என்பது ஐதீகம். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராகு கிரஹஸ்த சந்திர கிரகணம் பகலில் நிகழ்ந்தது என்பதால் இந்தியாவில் தெரியவில்லை. அதே போல கேது கிரஹஸ்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் தோஷமில்லை.

சூரிய கிரகணம் பிடித்திருக்கும் நேரங்களில் பூஜை அறையில் விளக்கேற்றி அமர்ந்து இறைவன் நாமத்தை உச்சரிக்கலாம். அமைதியாக மனசுக்குள் சொல்வது சிறப்பு. கர்ப்பிணிகள் உடம்பில் கிரகணங்களின் கதிர்வீச்சுக்கள் உடம்பில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் தனிமையில் அமர்ந்து உங்களுக்கு பிடித்த கடவுளின் பெயரை உச்சரிக்கலாம். இதன் மூலம் கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.

கிரகணம் நிகழும் நேரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பானது. தகப்பனார் இல்லாதவர்கள் இந்த நேரத்தில் தர்ப்பணம் செய்யலாம் இதன் மூலம் அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுதலை பெறலாம். கிரகண நேரத்தில் தானம் கொடுப்பது சிறப்பானது.

இது கேது கிரகஸ்த சூரிய கிரகணம் என்பதால் கேதுவிற்கு பிடித்த தானியமான கொள்ளு தானம் கொடுக்கலாம். விருச்சிக ராசிக்காரர்கள் கிரகணம் முடிந்த பின்னர் குளித்து விட்டு கோவிலுக்கு சென்று வரலாம். 2021 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாவிட்டாலும் தொலைக்காட்சிகள், இணைய தளங்களில் லைவ் செய்வார்கள் பார்த்து ரசிக்கலாம்.

சூரிய கிரகணத்தால் தோஷங்கள் இல்லாவிட்டாலும் விருச்சிக ராசியில் நான்கு கிரகங்கள் இணைந்திருக்கும் போது சனிக்கிழமையில் சூரிய கிரகணம் நிகழப்போவதால் பரிகாரம் செய்வது அவசியம்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்