புணேவில் மகன், மகள் கழுத்து நெரித்துக் கொலை-தாய் கைது

0
321

மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் தாயைக் கழுத்து நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில்,

புணேவின் புறநகரில் உள்ள முல்ஷியில் உள்ள தொழிலாளர் முகாமுக்கு அருகே 24 வயதான பெண் தனது இரண்டு வயது மகனையும், மூன்றரை வயது மகளையும் கழுத்து நெரித்துக் கொன்றுள்ளார்.

கட்டுமான தளத்தில் கூலித்தொழிலாளியாக இருக்கும் பெண்ணின் கணவர் வழக்கம்போல் மதிய உணவுக்கு வீட்டிற்கு வந்தபோது மனைவி மற்றும் குழந்தைகளைக் காணாததால், இந்த கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அந்த பெண் லோனாவாலாவில் உள்ள தனது தம்பி வீட்டில் பதுங்கி இருந்ததாக காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், குழந்தைகளின் உடல்கள் தொழிலாளர் முகாமுக்கு அருகிலுள்ள புதரில் கண்டெடுக்கப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்டவர் ஐபிசியின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் காவல்துறையினர் அப்பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்