எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்எல்ஏக்கள் வலுக்கட்டாயமாக கைது – கோவையில் பரபரப்பு.

0
214

பேரூராட்சிகள்,நகராட்சிகள்,மாநகராட்சிகளின் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்துவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி .வேலுமணி தலைமையில் எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், கே .ஆர் .ஜெயராமன், தாமோதரன் ,ஏ.கே.செல்வராஜ்,அர்ஜுனன், கந்தசாமி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் ,வழக்குறைஞர்களும் சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும், சில கட்சிகள் பரிசுப் பொருட்களாக பணம்,கொலுசு, பாத்திரங்கள் போன்றவற்றை வாக்காளர்களுக்கு கொடுப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் மற்றும் அதிமுக மீது தேர்தல் பரப்புரையின்போது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்ட அதிமுகவினரிடம் மாவட்ட ஆட்சியர் இன்று காலை போராட்டத்தைக் கைவிடக் கோடி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

மேலும் மாவட்ட வருவாய் அதிகாரி ரவிச்சந்திரன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த சூழ்நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் துணை ஆணையரின் ஆலோசனையின் பேரில் தற்போது எஸ். பி. வேலுமணி மற்றும் எம்எல்ஏக்கள், வழக்குறைஞர்கள் அனைவரும் காவல்துறையினரால் குண்டுகட்டாகத் தூக்கி காவல் வண்டியில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.இந்நிகழ்வால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் துணை ஆணையரின் ஆலோசனையின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்துள்ளனர். மேலும் தேர்தல் பணிக்காக வெளிமாவட்டங்களில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வந்துள்ள பணியாளர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் எனவும் போலிஸ் அராஜகம் ஒழிக என்றும் அவர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்