இந்தியா வழங்கிய கடன் உதவியை இலங்கை அரசு தவறாகப் பயன்படுத்துகிறது – ஐக்கிய மக்கள் சக்தி கட்சி குற்றச்சாட்டு.

0
151

கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் இலங்கை அரசுக்கு அண்மையில் இந்தியா 7,500 கோடி ரூபாய் நிதிஉதவி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த பணத்தை இலங்கை அரசு தவறான வழியில் செலவிடுவதாக இலங்கை எதிர்க்கட்சியான “ஐக்கிய மக்கள் சக்தி கட்சி” குற்றம்சாட்டியுள்ளது.

அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கை நாடாளுமன்றத்தில் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்தியா கொடுத்த பணத்தில் இருந்து அரசியல் ஆதாயம் அடைவதற்காக இலங்கையிலுள்ள 14 ஆயிரம் கிராமங்களில் இலங்கை அரசு கடைகள் அமைத்து வருவதாக ஆளும் கட்சியின் மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

India comes to aid of cash-strapped Sri Lanka, even as China drags its feet

இலங்கையில் பெட்ரோல் டீசலின் விலைத் தட்டுப்பாட்டைப் போக்கவே அந்தப் பணம் செலவழிக்கப் பட்டிருக்க வேண்டும் எனவும்,அந்த பணம் இந்தியா-இலங்கை நடத்திய ரகசிய ஒப்பந்தத்தின்படி எதற்காக செலவிடப்பட்டுள்ளது என்பது அரசால் வெளியிடப்படாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்