“இலங்கைக்கு உதவுங்கள்” என பிரதமர் மோடியிடம் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை.

0
91

டெல்லியில் பிரதமர் மோடியை இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பசில் ராஜபக்ச சந்தித்தார்.கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு கூடுதலாக நிதி உதவி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் பசில் ராஜபக்ச கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. கொரோனாவுக்குப் பின் இலங்கையின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை, சீனாவிடம் கடன் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. சீனாவிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் சிக்கித் தவிக்கும் இலங்கை தற்போது இந்தியாவிடம் உதவி கேட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதார வீழ்ச்சியால் உலக நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் இலங்கை தவித்து வருகிறது. அதன் காரணமாக இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 280 ரூபாய்க்கும்,ஒரு லிட்டர் டீசலின் விலை 170 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது.அதோடு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இந்தியா எப்போதும் உதவ தயாராக இருக்கிறது”- பிரதமரை சந்தித்தபின் இலங்கை  தூதரகம் | Basil Rajapaksa meets Modi | Puthiyathalaimurai - Tamil News |  Latest Tamil News | Tamil News Online ...

‘அங்கு ஒரு சவரன் தங்க நகை ஒன்றரை இலட்சம் ரூபாய்க்கும் மேல் விற்கப்படுகிறது’. இதனால் இலங்கையில் மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்திவருகின்றனர். அன்மையில் அதிபர் மாளிகை முன்பு திரண்ட மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசிய இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கைக்குக் கூடுதலாக நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இலங்கை அப்பட்டியலில் முதன்மையாக உள்ளது என பிரதமர் மோடி கூறியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஏற்கனவே இலங்கைக்கு நிதியுதவி அளித்த இந்தியா மேலும் இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்க முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்