தமிழக மீனவர்களை கச்சத்தீவில் அனுமதிக்கக் கோரி “முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்”..

0
131

ஆண்டுதோறும் நடைபெறும் கச்சத்தீவு “புனித அந்தோணியார் கோயில்” திருவிழாவில் கலந்து கொள்வதற்கு தமிழக மீனவர்களை இலங்கை அரசு அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய “வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்” அவர்களுக்கு “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்” அவர்கள் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் கச்சத்தீவு “புனித அந்தோணியார் கோயில்” திருவிழா பிப்ரவரி, மார்ச் ஆகிய இரு மாதங்களும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை மாணவர்கள் கூட்டாக இவ்விழாவில் கலந்து கொள்வது வழக்கம்.

ஆனால் இலங்கை அரசு அன்மையில் புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள தமிழக மீனவர்களுக்குத் தடை விதித்தது. தற்போது அந்தோணியார் கோயில் திருவிழா நடைபெற உள்ள இச்சூழலில், விழாவில் தமிழக மீனவர்களை அனுமதிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை “திமுக எம்பிக்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு” டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து வழங்கினார்..


தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்