பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் முக.ஸ்டாலின் ?

0
136

வரும் 30 ஆம் தேதி மூன்று நாள் பயணமாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். டெல்லியில் வரும் 31-ஆம் தேதி பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமரிடம் மேகதாது, நீட், மழை நிவாரண உதவி உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் ஆலோசிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu CM MK Stalin meets PM Narendra Modi with request for more COVID  vaccines on agenda | India News | Zee News

அதனைத் தொடர்ந்து சில மத்திய அமைச்சர்கள் மற்றும் பாரதிய ஜனதா, காகாங்கிரஸ் தலைவர்களையும் அவர் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரதிய ஜனதா கட்சி அல்லாத மாநில முதல்வர்கள் மாநாடு குறித்து பிற கட்சி தலைவர்களுடனும் அவர் பேச திட்டமிட்டுள்ளதாகவும் மேலும் டெல்லியில் உள்ள திமுக தலைமைக் கட்டடமான அண்ணா கலைஞர் அறிவாலயத்தை ஏப்ரல் 2ஆம் தேதி மாலை 5 மணி அளவில் முதல்வர் முக.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்