ஆன்லைன் பிசினஸ் என்று கூறி நூதன முறையில் பணம் திருட்டு

0
132

ஆன்லைன் பிசினஸ் எனக் கூறி நூதன முறையில் பணம் திருட்டு, சைபர் கிரைம் காவல்துறை உதவியுடன் பணம் மீட்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், தென்காசி பகுதியில் வசித்து வரும் தமிழ்செல்வன் என்ற நபரின் செல்போனுக்கு நகரம் பகுதியை சேர்ந்த கற்பகராஜ் என்ற நபர் தொடர்பு கொண்டு தான் ஆன்லைன் பிசினஸ் செய்து வருவதாகவும் தன்னிடம் பணம் கொடுத்தால் அதை இரட்டிப்பாக்கி தருவதாகவும் ஆசை வார்த்தைகளால் பேசி தமிழ்செல்வனிடம் ரூபாய் 90,000/- பணத்தை Google Pay மூலமாக வாங்கியதாகவும் அதிலிருந்து ரூபாய் 57,500/- ஐ திருப்பி தந்ததாகவும், மீதமுள்ள ரூபாய் 32,500/- பணத்தை மீட்டு தருமாறு (29.11.2021) அன்று தமிழ்செல்வன் தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர் திருமதி. ஜோஸ்லின் அருள்செல்வி மற்றும் தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் திருமதி. செண்பக பிரியா ஆகியோர் விசாரணை மேற்கொண்டு மேற்படி கனகராஜ் என்பவரின் வங்கிக் கணக்கை ஃப்ரீஸ் செய்து அதிலிருந்து ரூபாய் 32,500/- பணத்தை மீட்டு தமிழ்ச்செல்வனிடம் தகுந்த அறிவுரை மற்றும் விழிப்புணர்வு வழங்கி ஒப்படைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்