மாணவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை – ஆசிரியர் மீது புகார்..!

0
141

நாமக்கல் மாவட்டம் தண்ணீர்பந்தல் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் “பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன்” ரிதுன், பள்ளி நடந்துகொண்டிருக்கும் போது பள்ளியில் இருந்து வெளியேறி திடீரென ரயில்வே தண்டவாளத்திற்குச் சென்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்த காவல் துறையினர் மாணவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் அதே பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் மாணவனின் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதால்தான் மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ஆசிரியர் மீது புகார் எழுந்துள்ளது.

file pic

மேலும் சாதிப் பெயரைச் சொல்லி திட்டிய மாணவன் ரிதுனை, வகுப்பறைக்கு வெளியே 1 மணி நேரத்திற்கும் மேலாக நிற்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மனமுடைந்த மாணவன் ரிதுன், பள்ளியில் இருந்து வெளியேறி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் ஆசிரியர் மீது புகார்கள் எழுந்துள்ளன.இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்