“பொதுத் தேர்வின் போது மாணவர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம்” – தேர்வுத் துறை

0
62

பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் தேர்வு எழுதும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 10 ,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே மாதம் தொடங்க இருக்கிறது.

அதற்கான செய்முறை தேர்வை தற்போது மாணவர்கள் எழுதி வருகின்றனர். இந்த பொதுத் தேர்வை தமிழ்நாடு முழுவதும் சுமார் 30 லட்சம் மாணவர்கள் எழுத ஆயத்தமாகி வருகின்றனர்.

Class 12 board exams Tamil Nadu Government issues guidelines for unit tests  through whatsapp | 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்: வாட்ஸ் ஆப் வழி அலகுத்  தேர்வுக்கு வழிகாட்டு ...

இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருவதால் பொதுஇடங்களில் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறை அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

மேலும் தேர்வு எழுதும்போது மாணவர்களும் முகக் கவசம் அணிய வேண்டுமா என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ள நிலையில், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்