கர்நாடகாவில் மாணவர்கள் போராட்டம் – பள்ளிக்கு விடுமுறை…

0
161

கர்நாடகாவில் பள்ளி மாணவிகள் சிலர் அண்மையில் கிஜாப் அணிந்து கொண்டு வகுப்பு அறைக்கு வந்தனர். இதைப் பார்த்து மாணவர்கள் சிலர் காவி துண்டை அணிந்து கொண்டு வகுப்பறைக்கு வந்துள்ளனர். இதனால் அதிர்ப்தி அடைந்த பள்ளி நிர்வாகம் மாணவர்களை கண்டித்தது.பள்ளியின் தலைமை ஆசிரியர் வெளிநடப்பு செய்தார்..

இதனால் காவித் துண்டை அணிந்து கொண்டு மாணவர்கள் தற்போது கிஜாப் எதிர்ப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் அடுத்த 3 நாட்களுக்கு மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அவசர உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் போராட்டம் கர்நாடகாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்