வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி-சி52 – இஸ்ரோ பெருமிதம்.

0
245

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து அதிகாலை 5.59 மணிக்கு பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது’. இஓஎஸ்-4 என்ற அதிநவீன ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளும் இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மாணவர்கள் வடிவமைத்த சிறிய ரக செயற்கைக்கோளும் இந்தியா மற்றும் பூடான் இணைந்து வடிவமைத்த சிறிய ரக செயற்கைக்கோளும் இந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. மூன்று செயற்கைக் கோள்களும் பூமியிலிருந்து 529 கிலோ மீட்டர் உயரத்தில் சூரிய ஒத்திசைவு சுற்றுவட்ட பாதையில் சரியாக காலை 6.17 மணிக்கு நிலைநிறுத்தப்பட்டன.

பூமியைக் கண்காணிப்பது மற்றும் வேளாண், வனம் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இச்செயற்கைக்கோளானது 1710 கிலோ எடை கொண்டது. 10 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த செயற்கைகோளானது எல்லா சூழ்நிலைகளிலும் துல்லியமான படங்களை வழங்கும் திறன்கொண்டது. இது, இஸ்ரோ தலைவராக திரு.சோம்நாத் புதிதாக பதவியேற்று ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்