இன்று சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரண்டாவது ப்ளாக் கட்டிடத்தில் இயங்கும் கல்லீரல் அறுவை சிகிச்சை பிரிவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சிகிச்சை பிரிவில் கல்லீரல் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மூன்று நோயாளிகள் உள்ளிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் மருத்துவமனையின் இந்த கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையை சுற்றி கரும்புகை சூழ்ந்துள்ளது.
தகவலறிந்து 4 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்க போராடி வருகின்றனர். ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெ.சூர்யா, நெல்லை.