மேலப்பாளையம் மாநகராட்சி மண்டலத்தில் திடீர் ஆய்வு.

0
276

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் திரு விஷ்ணு சந்திரன் இ.ஆ. ப அவர்களின் உத்தரவுப் படி மாநகர பகுதிகளில் உள்ள வீடுகளில் டி பி சி பணியாளர்கள் மூலமாக வீடு, வீடாக சென்று கொசு பரவலுக்கான வழி ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதன்படி மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் மேலப்பாளையம் மண்டல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக வீடுகளில் எங்காவது தண்ணீர் தேங்கி உள்ளதா, மேல் நிலை நீர் தேக்க தொட்டி, கீழ் நிலை நீர் தேக்க தொட்டி, சுற்றுப்புற பகுதி தூய்மையாக உள்ளதா என ஆய்வு செய்கின்றனர்.


அத்துடன் குடியிருப்புகளுக்கு அருகே இருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், ஆட்டுக்கல், பழைய டயர், தேங்காய் சிரட்டை, காலி பாட்டில்கள் போன்ற தண்ணீர் தேங்கும் பொருட்களை அகற்றினர்.

மேலும் மேலப்பாளையம் மண்டல பகுதிகள் முழுவதும் கொசு ஒழிப்பு நடவடிக்கையாக புகைமருந்து அடிக்கப்பட்டது. ஆய்வின் போது சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன், பாலசுப்பிரமணியன் உடன் இருந்தனர்.

அத்துடன் மேலப்பாளையம் மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினையும் கூடுதலாக திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்