சிவசங்கர் பாபாவின் மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு.

0
232

சிவசங்கர் பாபாவின் மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டிலுள்ள “சுஷில் ஹரி இன்டர்நேஷனல்” பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் அளிக்கப்பட்ட ஒரு புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கிற்காக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிணை மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

Rape-Murder Case: Supreme Court Stays Death Sentence, Orders Psychological  Evaluation

மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் அவர் தலைமறைவாக கூடுமென்ற முன்னெச்சரிக்கையுடன் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். எனவே இந்த உத்தரவை எதிர்த்து சிவசங்கர் பாபாவின் தரப்பில் அவருக்கு இருதய நோய் இருப்பதாகக் கூறி இந்த மனுவை உடனே விசாரித்து ஜாமீன் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்