“பேரறிவாளனுக்கு ஜாமீன்” – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

0
131

முன்னாள் பிரதமர் ‘ராஜீவ் காந்தி’ கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜோலார்பேட்டைக் காவல் நிலையத்தில் மாதந்தோறும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளனின் ஜாமின் மனு மீதான விசாரணையில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே நடந்த கடும் வாதத்தில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் ‘பேரறிவாளனின் கருணை மனு மீது முடிவெடுக்க தமிழக அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என மத்திய அரசு வாதிட்டது. மேலும் பேரறிவாளனின் கருணை மனு மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது’. தமிழக அரசு வழக்கறிஞர்கள் பேரறிவாளனின் கருணை மனு மீது முடிவெடுக்க அரசியலமைப்புச் சட்டப்படி மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்பதை சுட்டிக் காட்டியும், “மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவே 14 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்” என்பதையும் வாதிட்டு எடுத்துரைத்தனர்.

COVID-19: When the Supreme Court had to intervene - Citizen Matters
SUPREME COURT OF INDIA

மேலும் 32 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் மீது இதுவரை சிறையில் எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்பதே அவரின் நன்னடத்தைக்கு சான்று எனப் பேரறிவாளன் தரப்பில் வாதிடப்பட்டது. மத்திய மாநில அரசுகள் மற்றும் பேரறிவாளன் தரப்பு வாதங்களை எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், “32 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது எனவும் பேரறிவாளனின் சொந்த ஊரான ஜோலார்பேட்டைக் காவல் நிலையத்தில் மாதந்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்