பா.ஜ.க சார்பில் நெல்லையில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி.

0
376

இன்று நெல்லையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பாரதியாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்படும் ( திருச்சியில் ) பேச்சுப்போட்டிக்கு தகுதி சுற்றாக இன்று பா.ஜக நெல்லை மாவட்டக்கட்சி அலுவலகத்தில் காலையில் பத்து மணிக்கு பேச்சுப்போட்டிகள் ஆரம்பமாகியது.இதனை பாஜகவின் நெல்லை மாவட்டத் தலைவர் திரு மகாராஜன் அவர்கள் தொடங்கி வைத்தார் இப்போட்டிக்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை போட்டிக்குழு கமிட்டியாளர்களான திருமதி சுப்புலெட்சுமி( இந்தி ஆசிரியை ), சண்முகவேலு, இசக்கி ஐயப்பன் ஆகியோர் கொண்ட குழு செய்திருந்தது அவர்களுக்கு ஐ.டி பிரிவு திரு வெங்கட் அவர்களும், திரு கதிர் அவர்களும் உறுதுணையாக இருந்தனர். இப்பேச்சுப்போட்டியில் கல்லூரி அளவிலான மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் மாவட்டம் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது அதில் சிறப்பாக பேசிய மூன்று நபர்கள் திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்துக்கொள்ளத்தகுதியான நபர்களென்று தேர்வுகமிட்டி தேர்வு செய்தது அவர்களின் பெயர்களாவன 1.தில்லை அருந்ததி, 2.A.மகேஷ்வரி, 3.R.ராகுல். இவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறியதுடன் நாளை அவர்கள் திருச்சி சென்றுவர அனைத்து ஏற்பாடுகளும் மாவட்டம் சார்பாக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம் சார்பாக தேர்வு செய்யப்பட்டுள்ள அந்தப்பேச்சாளர்கள் மாநில அளவில் பரிசுபெற்று வெற்றிவாகை சூடிவர ‘தென்பொதிகை செய்திகள்’ சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

பரிசுகள் வழங்கப்பட்ட காட்சி
வெற்றியாளர் அறிவிப்பின்போது
வெற்றியாளர் அறிவிப்பின்போது
போட்டியியாளர்கள் பங்கேற்ற காட்சி
பா.ஜ.க நெல்லை மாவட்டத்தலைவர் திரு மகாராஜன் அவர்கள் பேச்சுப்போட்டியை தொடங்கிவைத்த காட்சி.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்