திமுக ஆர்.எஸ்.பாரதியின் பிராமின்;நான்-பிராமின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் !

0
66

சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசிய பேச்சு சர்ச்சையாகி உள்ளது.

திமுக முன்னாள் எம்.பி. ஆர்.எஸ்.பாரதி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், என் ஜாதகம் மோசமான ஜாதகம் என்று அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். நான் வழக்கு தொடுத்தால் நீ உள்ளே போய் விடுவாய். சின்ன பையன் என்பதால் அண்ணாமலையை விட்டு வைத்திருக்கிறேன். பிராமணர் அல்லாத தலைவராக இருப்பதால் அந்த உணர்வின் காரணமாக அண்ணாமலையை விட்டு வைத்திருக்கிறோம். கூட இருந்தே குழி தோண்டுவதில் கைதேர்ந்தவர்கள் பிராமணர்கள். உங்களுக்கு எதிராக அத்தனை பிராமணர்களும் ஒன்று சேர்ந்து வேலையை ஆரம்பித்துவிட்டார்கள் என பேசியிருந்தார்.

இதற்கு தமிழக பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து பதில் தந்து வருகின்றனர். தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தமது ட்விட்டர் பக்கத்தில், உங்கள் ஜாதகம் மோசமான ஜாதகம் தான் ஆர் எஸ் பாரதி அவர்களே. தள்ளாத வயதில் விரைவில் சிறைக்கு செல்ல தயாராகுங்கள். அண்ணாமலை சின்னப்பையன் அல்ல சிங்கத்தலைவன் . தி மு க என்ற குள்ள நரியை ஓட ஓட விரட்ட வந்த சிங்கம். அதனால் தான் தி மு கவினர் கொலை மிரட்டல்கள் விடுக்கின்றனர்.

பிராமணர்கள் திருப்பி தாக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் தொடர்ந்து அந்த சமுதாயத்தை தாக்கும் தி மு க கோழைகளே, தைரியமிருந்தால், திராணியிருந்தால், முதுகெலும்பிருந்தால் அண்ணாமலையின் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்து பாருங்கள். போனால் போகிறது என்று உங்களை பாஜக தான் விட்டு வைத்திருக்கிறது. ஒரு சாதியை இழிவுபடுத்தும் கேடுகெட்ட அரசியலை கைவிடுங்கள். இல்லையேல் விளைவுகள் விபரீதமாகும் என எச்சரித்துள்ளார்கள்.

மிரட்டலால் பயமில்லை;

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது ட்விட்டர் பக்கத்தில், இந்த வெற்று மிரட்டல்களால் எந்த பயனும் இல்லை, திரு ஆர்.எஸ் பாரதி அவர்களே! மாநிலங்களவைக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த உங்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே; ஆதலால் சாதி வெறுப்பைத் விதைப்பதற்கு முயற்சி செய்து, காலம் கடத்திக் கொண்டு இருக்கின்றீர்கள். பாவம்! என கூறியுள்ளார்.

அமைச்சர் அன்பரசன் சர்ச்சை;

அண்மையில் தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன், அதிமுகவினரின் ஊழல் குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளீர்களா? அன்று முற்றுகை போராட்டத்தின்போது போலீசார் இவரை தேடினால் ஆட்டோவில் ஏறி ஓடிவிட்டார். ஒருவாரம் சிறையில் அடைத்தால் கட்சி வேண்டாம் என்று ஓடிவிடுவார்கள். நாங்கள் எல்லாம் சிறை என்றால் பெட்டியை தூக்கிக் கொண்டு போய்விடுவோம். இவர்கள் பெயரைக்கூட என் தகுதிக்கு சொல்வதில்லை. ரொம்ப ஆட்டம்போட்டால் வாலை ஒட்ட அறுத்து சுண்ணாம்பு போட்டுவிடுவோம் என அண்ணாமலையை விமர்சித்திருந்தது பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.


செய்தி,

ஆ.அருண்பாண்டியன்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்