ஓய்வூதியத் திட்டத்திற்கு ரூபாய் “4816 கோடி” நிதி ஒதுக்கீடு.

0
136

தற்போது தமிழக நிதிநிலை அறிக்கையில், சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ளோரின் நலனுக்காக தமிழக அரசால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம், மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்காக “4816 கோடி ரூபாய்” ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். இம்மதிப்பீடுகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு “7474.94 கோடி ரூபாய்” நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

மேலும் வானிலையைத் துள்ளியமாகக் கணிக்க, பேரிடர் எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துவதின் அவசியத்தை அண்மையில் சென்னையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு நமக்கு உணர்த்தியுள்ளதாகவும், பேரிடர் தாக்கும் முன் உரிய நேரத்தில் எச்சரிக்கையை வழங்குவதற்கு 2 ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மலை மானிகள், 11 தானியங்கி நீர்மட்டக் கருவிகள், அதிவேக கணினிகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஒரு கட்டமைப்பை அரசு உருவாக்கும் எனவும் இப்பணிகளுக்காக “ரூபாய் 10 கோடி” ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்