தமிழக முதல்வர் பிறந்தநாள் ; பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

0
248

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று மார்ச் 1 தனது 69வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி மெரினாவில் உள்ள கருணாநிதி அறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. நடிகர்கள் ரஜினி, கமல், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தங்களின் வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர். இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அவர் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

பெ.சூர்யா, நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்