ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்..

0
63

(27-01-2022)

குடியரசு நாள் விழாவின்போது சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலர் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் ஒலிக்கப்பட்டபோது எழுந்து நிற்காமல் அவமதித்ததற்கு தமிழகமெங்கும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
எழுந்து நின்று மரியாதை செலுத்தாத அதிகாரிகள் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் சமூக வலைதளங்களில் அவர்களுக்கு எதிராக கருத்துகளும் கண்டங்களும் வலுத்து வருகின்றன.அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

குறிப்பாக “தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் இன்று போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. மேலும் அமமுக நிறுவனர் டிடிவி தினகரன் ,கவிஞர் வைரமுத்து, திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி போன்றோர் ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்…

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்