பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு “3,500 கோடி ரூபாய்” நிதி ஒதுக்கீடு.

0
240

2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று காலை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு துறைகளுக்கு பலதரப்பட்ட தொகை நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறைக்கு “20,400.24 கோடி” நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. “நகர்ப்புற பகுதிகளை மேம்படுத்த 500 பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும்,அப்பணிகளைச் செய்ய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூபாய் 1000 கோடியும்,சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூபாய் 500 கோடியும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு 1000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு” செய்யப்பட்டுள்ளது.

Why Tamil Nadu Budget is a model for others- The New Indian Express

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்புகளுக்கு 3000 கோடி ரூபாயும், “பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு 3,700 கோடி ரூபாயும்” நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்