நாளை தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்.

0
185

தமிழக சட்டப்பேரவையில் நாளை 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஏற்கனவே “சபாநாயகர் அப்பாவு” தெரிவித்திருந்தார். அதன்படி நாளை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் காலை 10 மணி அளவில் நிதிநிலை அறிக்கையை “நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்” தாக்கல் செய்ய உள்ளார். கடந்த ஆண்டு அதிமுக அரசால் தற்காலிகமாக தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையைத் திருத்தி ஆகஸ்ட் மாதம் முதன்முதலாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தார்.

Why Tamil Nadu will release a white paper on its finances: FM PTR intv to  TNM | The News Minute
Tamilnadu Finance Minister. Palanivel Thiyagarajan

இந்நிலையில் இரண்டாவது முறையாக அவர் தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில் மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கிடுவது மற்றும் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்குவது போன்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. நாளை மறுநாள் வேளாண்மைக்கு எனத் தனியாக நிதி நிலை அறிக்கையை வேளாண்மைத்துறை அமைச்சர் தாக்கல் செய்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்