காவல் துறைக்கு 10,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு.

0
134

தமிழக சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கையில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை திறம்பட நிலைநாட்டுவதின் வாயிலாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருட்களின் பயன்பாடு ஆகியவற்றைத் தடுப்பதற்கு அரசு தீவிர முயற்சிகள் எடுத்து வருவதாகவும், புறநகர் பகுதிகளில் காவல்துறை திறம்பட செயலாற்ற ‘சென்னைக் காவல் ஆணையரகம்’ மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஆவடி, தாம்பரம் ஆகிய மாநகரங்களில் 2 புதிய ஆணையரகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பிரச்சாரத்தின் விளைவாக அதிகரித்து வரும் குற்றச் செயல்களைத் தடுத்திட “சமூக ஊடக சிறப்பு மையம்” அமைக்கப்படும் எனவும் இப்பணிகளுக்காக “காவல் துறைக்கு 10,285.22 கோடி ரூபாய்” நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையை நவீனமயமாக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும், இந்த மதிப்பீட்டில் “தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புத் துறைக்கு 496.52 கோடி ரூபாய்” நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் அறிவித்தார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்