டெல்லியில் தமிழக இல்லம் முன்பு முதல்வர் ஸ்டாலினின் உருவ பொம்மை எரிப்பு. ! தேசிய அளவில் போராட்டம் வெடிப்பு

0
325

டெல்லியில் ஏபிவிபி மாணவ அமைப்பினர், தமிழ்நாடு இல்லம் முன்பு, தமிழக முதல்வர் ஸ்டாலினது உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர். நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டின் முன்பு, ஏபிவிபி மாணவர் அமைப்பினர், “இறந்த தஞ்சை மாணவிக்காக நீதி வேண்டி, அவரது தற்கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் முதல்வர் வீடு முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவி துண்டு அணிந்ததற்காக இஸ்லாமிய மாணவர்களால் தாக்கப்பட்ட இளைஞர்! இவர்களை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கமாட்டாங்க! அப்போரட்டத்தில் ஏபிவிபி அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் நிதி திருப்பாதி மற்றும் தேசிய செயலாளர் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தமிழக அரசின் காவல்துறை அராஜக நடவடிக்கையாக அவர்களை வலுக்கட்டாயமாக அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியது

தமிழக அரசின் இந்த அராஜக போக்கை பலரும் கண்டித்து வரும் நிலையில், டெல்லியில் தமிழக இல்லம் முன்பு டெல்லி ஏபிவிபி அமைப்பினர் முதல்வர் ஸ்டாலின் அவர்களது உருவபொம்மையை எரித்து, தங்களது எதிர்ப்புக் குரலை பதிவு செய்தனர்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்