தஞ்சையில் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை – கணித ஆசிரியர் மீது வழக்கு பதிவு..

0
142

கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாவண்யா என்ற மாணவி மதமாற்ற விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.. அதுபோல தற்போது மீண்டும் தஞ்சை மாவட்டத்தில் +2 மாணவி ஒருவர் இன்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார். தஞ்சை ஒரத்தநாடு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒரத்தநாட்டைச் சேர்ந்த மாணவி பயின்று வந்துள்ளார்.அந்த மாணவி இன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த காவல்துறையினர் மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவியின் தற்கொலையைப் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக வாட்ஸ் ஆப்பில் வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார் . “வகுப்பறையில் கணித ஆசிரியர் மற்ற மாணவர்களின் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் தன்னைத் திட்டியதாகவும் ,தன்னை இழிவுபடுத்தும் நோக்கில் பேசியதாகவும் அதனால், தான் மிகுந்த மன வேதனையில் உள்ளதாகவும் அந்த வீடியோவில் மாணவி பேசியிருந்தார். குடும்பத்தினர் இந்த வீடியோவைக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் காவல்துறையினர் அப்பள்ளியின் கணித ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை ஒரத்தநாடு காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தனர். தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது அவரது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது..
தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்