தென்காசி- தனியார் நிதி நிறுவன ஊழியர் கத்தியால் குத்தி கொலை

0
127

நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த ஆலடியூர் வேதக் கோயில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம் மகன் ராமசுப்பிரமணியன் (29), இவர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் கொடுக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை தென்காசி சுந்தரபாண்டியபுரம் காலனி தெருவில் வசித்து வரும் சண்முகநாதன் (38) என்பவரது வீட்டில் பணம் வசூல்செய்ய சென்றுள்ளார்.

அப்போது ராமசுப்பிரமணியனுக்கும் சண்முகநாதனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த சண்முகநாதன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ராமசுப்பிரமணியனை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனைப் பார்த்தவர்கள் சாம்பவர்வடகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமசுப்பிரமணியன் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,ஆனால் செல்லும் வழியிலேயே ராமசுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார்: இதுகுறித்து சாம்பவர் வடகரை போலீசார் வழக்கு பதிந்து சண்முகநாதனை தேடி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்