எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அதிமுகவில் இணைந்த தென்காசி மாவட்ட அமமுக முக்கிய நிர்வாகிகள்

0
224

தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு வருகைபுரியும் எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில்,
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா திரு.C.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா ஏற்பாட்டில்,

தென்காசி மாவட்ட அமமுக கட்சியைச் சேர்ந்த அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர், முன்னாள் மாவட்ட அமமுக செயலாளர் பொய்கை சோ. மாரியப்பன் மாவட்ட அவைத்தலைவர் பெருமையா பாண்டியன் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பொன்னுசாமி , கடையநல்லூர் நகர கழக செயலாளர் கமாலுதீன் , செங்கோட்டை நகரக் கழகச் செயலாளர் ராமசாமி ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் அமமுகவிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் தங்களை மீண்டும் இணைத்துக் கொண்டனர்.

அப்பொழுது கழக அம்மா பேரவை செயலாளர், முன்னாள் அமைச்சர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் .ஆர்.பி.உதயகுமார் , மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ,
தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் உட்பட கழக முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்