நெல்லையில் இரண்டு நாட்களில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டதால் பதற்றமான சூழ்நிலை மற்றும் பீதி

0
299

நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் வயது 29 நேற்று இரவு பாளையங்கோட்டை குளோரிந்தா கிறிஸ்தவ ஆலயத்தின் அருகே இவரும் இவரது நண்பர்கள் இரண்டு பேரும் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்மக்கும்பல் அப்துல் காதரை சரமாரியாக ஓட ஓட விரட்டி படுகொலை செய்தனர் இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அப்துல்காதர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தக்காவலர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

மேலும் நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சுரேஷ்குமார் நேரில் வந்து பார்வையிட்டார். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை நியமிக்கப்பட்டுள்ளது இதைத்தொடர்ந்து மோப்பநாய் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கடந்த இரண்டு தினங்களில் நெல்லை மாவட்டத்தில் அடுத்தடுத்து மூன்று கொலைகள் நடைபெற்ற சம்பவத்தால் நெல்லை மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே படுகொலை செய்யப்பட்ட காதரின் உறவினர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் பாளையங்கோட்டை காவல் நிலையம் முன்பு குவிந்தனர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை அமைதிப்படுத்தினார்கள்.

வாழ்ந்தபோது

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்