வாணியம்பாடியில் 2 வணிகர் சங்கங்கள் நிர்வாகிகள் இடையே பயங்கர மோதல்; 6 பேர் படுகாயம்

0
70

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 2 வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு கடைகளை அடைத்து வருமாறு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் மாதேஸ்வரன் தலைமையிலான நிர்வாகிகள் துண்டு பிரசுரங்கள் வழங்கியுள்ளனர். இதற்கு நேர்மாறாக கடைகளை அடைக்க வேண்டாம் என வணிகர் சங்க பேரவையினர் நோட்டீஸ் கொடுத்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக இரு சங்கங்களின் நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் 6 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து வந்த டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியன், இரு தரப்பினரிடையும் விசாரணை மேற்கொண்டார். அப்போது தங்களை தாக்கிய வணிகர் சங்க பேரவை நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட போவதாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்