முருகபெருமானின் தைப்பூசத்திருவிழா

0
151

[18/01/2022] தைப்பூசம் என்பது முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு தமிழர்களின் திருவிழாவாகும். இந்த திருவிழா தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழக்கூடிய அத்தனை தமிழர்களும் முருகபெருமானுக்கு எடுக்கக்கூடிய ஒரு சிறந்த திருவிழாவாக இதனை கொண்டாடி வருகின்றனர்.

தைமாதம் என்பது தமிழர்களுக்கு புனிதமான மாதமாக கருதப்படுகிறது. முருகனுக்கு உகந்தநாளை தைப்பூசதினம் என்பார்கள்.தமிழ்பஞ்சாங்கத்தின்படி பத்தாவதுமாதம், பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழுநிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. இது கேரளாவில் தைப்பூயம் என்று அழைக்கப்படுகிறது.

தைப்பூசத் திருவிழாவை தமிழகத்தில் நேரடியாக பக்தர்களுக்கு தரிசிக்க தமிழக அரசு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் பக்தர்கள் நேரடியாக சென்று திருவிழாவை தரிசிக்க முடியவில்லை. ஆனால் மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் பக்தர்கள் காவடி சுமந்து வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தைப்பூசத் திருவிழா இந்தியாவில் மட்டுமல்லாது தமிழர்கள் வாழக்கூடிய உலகின் பல பகுதிகளில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.மலேசியாவில் தமிழர்கள் வாழக்கூடிய பகுதிகளில் இரண்டாவது இந்து பண்டிகையாக பெரியஅளவில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அங்கு தைப்பூசத்திற்கு பொது விடுமுறை என்பதால் மக்கள் மகிழ்ச்சியுடன் சிறப்பாக தரிசனம் செய்து கொண்டாடி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்