தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் தேர் திருவிழாவின்போது உயர் மின் கம்பத்தில் தேரின் மேல்பகுதி உரசியதில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 15 பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 4 பேர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .இச்சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

மேலும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தலா 50,000 நிவாரண தொகையாகவும் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்,
நெல்லை.