உக்ரைன் ரஷ்யா இடையிலேயான 3-ஆம் கட்ட பேச்சு வார்த்தை இன்று ஆரம்பம்

0
403

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு வாரமாக தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் உக்ரைனில் பல பகுதிகள் சூறையாடப்பட்டு அந்தப் பகுதிகள் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்று ரஷ்யா அறிவித்திருக்கிறது இந்நிலையில் இரண்டு முறை உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான , போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று அதில் எந்த ஒரு உடன்பாடும் எட்டவில்லை இதனால் இன்று உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் இடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ள அறிக்கையில் உக்ரைனின் முக்கியதுரைமுகமான கீவ் நகரின் துறைமுகத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்ற தயாராக உள்ளது, எந்நேரம் வேண்டுமானாலும் துறைமுகத்தை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்யா விடுத்துள்ள அறிக்கையில் பல உக்ரைனுக்கு உதவும் வகையில் உள்ள பல நாடுகள்,ரஷ்ய ராணுவம் தங்கள் நாட்டின் வான் எல்லையில் பறப்பதற்கு தடை விதித்துள்ளது. அந்த நாடுகள் நேரடியாகவும் சில நாடுகள் மறைமுகமாகவும் உதவி வருகிறது அந்த நாடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரஷ்யா மிரட்டி உள்ளது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்