உலகெங்கும் பரவியது ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் !

0
26

ஈரானில் ஹிஜாபை சரியாக அணியவில்லை எனக் கூறி இளம்பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஈரானில் பெண்கள் தங்கள் ஹிஜாபை எரித்துப் போராட்டம் நடத்தினர்.

ஈரானில் குர்திஸ்தான் மாகாணத்தில் மாஷா அமினி என்ற 22 வயது பெண் ஹிஜாபை சரியாக அணியவில்லை எனக் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த பெண் கோமா நிலைக்கு சென்று நினைவு திரும்பாமல் உயிரிழந்தார்.

இளம் பெண்ணின் மரணம் ஈரானில் பெரும் போராட்டமாக வெடித்துள்ளது. போராட்டத்தின் போது பெண்கள் தங்கள் ஹிஜாபை கழற்றி எரிந்து தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர். கனடா நாட்டின் டொரண்டோ நகரில் ஈரான் பெண்களுக்கு ஆதரவாகவும் இளம்பெண்ணின் மரணத்தைக் கண்டித்தும் பேரணி நடைபெற்றது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரிலும் போராட்டம் நடைபெற்றது. முழக்கங்களை எழுப்பிய படி பேரணியாக சென்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து கலைந்து போகச் செய்தனர். இதனிடையே ஈரானில் காவல்துறை கட்டுப்பாட்டில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும் இனி பெண்களுக்கு குறிவைத்து தாக்குதல் நடத்துவது துன்புறுத்துவது அல்லது கைது செய்யவோ கூடாது என்றும் ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்