4-மாநிலங்களை கைப்பற்றிய பாஜக , பஞ்சாபில் ஆம் ஆத்மி அசுர வெற்றி

0
137

உத்திர பிரதேச சட்டசபை தேர்தல்

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக உ.பி. சட்டசபை தேர்தலில் மொத்தம் 61.04% வாக்குகள் பதிவாகி இருந்தது. தற்போதைய நிலவரப்படி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக 273 தொகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில் இது கடந்த தேர்தலைவிட நாற்பத்தி ஒன்பது தொகுதிகள் குறைவாக உள்ளது. கடந்த தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக 322 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இது கடந்த தேர்தலை விட சுமார் 50 தொகுதிகள் குறைவாகும். அதே நேரத்தில் கடந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்த சமாஜ்வாதி கட்சி தற்போது 125 இடங்களை கைப்பற்றியுள்ளது.

மணிப்பூர் மாநிலம் களம்

மணிப்பூர் சட்டசபை தேர்தலில் மொத்தம் 60 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக 32 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் 5 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தேசிய மக்கள் கட்சி 7 இடங்களிலும், நாகா மக்கள் முன்னணி 5 இடங்களிலும், குகி மக்கள் கூட்டணி 2 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

கோவா தேர்தல் களம்
கோவா சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ள நிலையில் மொத்தமுள்ள 40 இடங்களில் பாஜக 20 இடங்களில் வென்றுள்ளது. அங்கு அக்கட்சி அமைக்க ஒரு எம்.எல்.ஏ.வின் ஆதரவு தேவை. இறுதி நிலவரப்படி பாஜக 20 வெற்றி பெற்றுள்ளது. அடுத்தப்படியாக காங்கிரஸ் 11 தொகுதிகளைக் கைப்பற்றி எதிர்க் கட்சியாக அமர்ந்துள்ளது. அடுத்ததாக ஆம் ஆத்மி, மகாராஷ்டிராவாடி கோமந்தக் தல 2 இரண்டு இடங்களிலும், கோவா பார்வர்ட் கட்சி, புரட்சிகர கோன்ஸ் கட்சி தல ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. அடுத்ததாக சுயேட்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் பாஜகவுக்கு 3 சுயேட்சைகள் ஆதரவு அளித்துள்ளதன் மூலம் பாஜக அங்கு ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

உத்தரகாண்டில் பாஜக
உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் 70 தொகுதிகளுக்கான தேர்த நடைபெற்ற நிலையில், இன்றைய வாக்கு எண்ணிக்கையின் போது பாஜக பெரும்பான்மைக்கு அதிகமாக அதாவது 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும், மற்றவை இரு இடங்களிலும் வென்றுள்ளனர். இதனால் அங்கும் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

ஞ்சாபில் ஆம் ஆத்மி அசுர வெற்றி

பஞ்சாப் சட்டசபை தேர்தல் வெற்றி குறித்து இறுதி நிலவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. தொடர்ந்து, காங்கிரஸ் 18 தொகுதிகளை கைப்பற்றி 2-ம் இடத்தில் உள்ளது. பாஜக 2 தொகுதிகளிலும், ஷிரோமணி அகாலி தளம் 3 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியிலும், சுயேட்சை ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்