முடிவுக்கு வருகிறது கொரோனா

0
106

கொரோனாவால் ஐரோப்பிய நாடுகள் அதிகம் பாதிப்பை சந்தித்துவிட்டன. எனவே இப்போது அலை முடியும் நிலையில், சாதாரண காய்ச்சலாக கொரோனா மாறுவதாக சுவிட்சர்லாந்து சுகாதாரத் துறை அமைச்சகம் கணித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வரும் காலகட்டத்தில் இருக்கிறோம். தொடர்ந்து தடுப்பூசி எடுக்கும்போது மக்களிடம் அதிகளவில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்கி இருக்கிறது.

ஒமைக்ரான் வைரஸ் இந்த கொரோனா தொற்று நோயின் முடிவின் தொடக்கமாக இருக்கலாம் என்று சுவிட்சர்லாந்து சுகாதாரத்துறை அமைச்சர் அலைன் பெர்செட் மேலும் தெரிவித்திருக்கிறார். அதாவது ஒரு பக்கம் தடுப்பூசி இன்னொரு பக்கம் வலிமை குறைவான ஓமிக்ரான் அதிகம் பேரிடம் பரவியது ஆகியவை, மந்தை எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்திவிட்டது . இதுவே குறைவதற்கான அறிகுறி என முடிவு செய்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்