சுனாமி ஆழிப் பேரலை தாக்கிய தினம்

0
264

2004 டிசம்பர் 26 உலகமே உரைந்து போன நாள். இந்தோனேசியா சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தின.

சுனாமி என அழைக்கப்படும் பேரழை தாக்குதலில் 2,26,000 பேர் உயிரிழந்தனர். 20,00,00 குடும்பங்கள் வீடுகளை இழந்தன. 9 ஆண்டு கடந்த நிலையில் சுனாமியின் சீற்றம் ஏற்படுத்திய சோக வடுக்களை உலகமே திரும்பிப் பார்க்கும் நினைவு தினம் இன்று. தாய்லாந்தில் 7,000 பேர், இந்தோனேசியாவில் 1,60,000 பேர், இலங்கையில் 35,000 பேர், அந்தமானில் 10,000 பேர், தமிழ்நாட்டில் 8,000 பேர் என தெற்காசியாவையே உலுக்கி எடுத்தது ஆழிப்பேரலை.

அன்று ஒலித்த அழுகுரல்களை 9 ஆண்டுகள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் யாரால்தான் மறக்க முடியும்?.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்