தனது மகளுக்கு காதல் திருமணம் செய்து வைத்த மாப்பிளையின் தந்தையை கழுத்தத்து கொன்றார் பெண்ணின் தந்தை

0
121

மதுரை திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் சிவபிரசாத் அதே பகுதியை சேர்ந்த சினேகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சினேகாவின் தந்தை சடையாண்டி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனை மீறி சிவபிரசாத்தும் – சினேகாவும் நேற்று திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதற்கு காதலனின் தந்தை ஆதரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சடையாண்டி, சிவபிரசாத்தின் தந்தை ராமச்சந்திரனை மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சடையாண்டியை கைது செய்தனர்.

பெ. சூர்யா, நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்