‘பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு அளிப்பது குறித்த திட்டம் எதுவும் அரசிடம் இல்லை’ ;கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி

0
100

மாணவர்களுக்கான தேசிய மதிய உணவுத் திட்டத்தில் காலை உணவு சேர்க்கப்படவில்லை என மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி திமுக மக்களவை துணைத் தலைவர் கனிமொழி எம்பியின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். தேசிய மதிய உணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 12 கோடி மாணவ மாணவிகளுக்கும் காலை உணவு வழங்குவதற்கு 4000 கோடி ரூபாய் தேவைப்படும் என 2021-22 ஆண்டில் மத்திய அரசு மதிப்பிட்டது. அதன்படி, மாணவ மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா?
இந்த விவகாரம் குறித்து ஒன்றிய அமைச்சரவை ஆய்வு செய்ததா? என்று திமுக மகளிர் அணிச் செயலாளரும் மக்களவை துணைத் தலைவருமான கனிமொழி எம்பி எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி பதிலளிக்கையில், “தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 இன் படி 1 முதல் எட்டாவது வரை படிக்கக்கூடிய அல்லது 6 முதல் 14 வயது இருக்கக்கூடிய அனைத்து உள்ளாட்சி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்கள் ஊட்டச்சத்துடன் சமைக்கப்பட்ட மதிய உணவு பெற தகுதியானவர்கள். அவர்களுக்கு அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற வேலை நாட்களில் இந்த உணவு அவர்களுக்கு வழங்கப்படுவதாக என தெரிவித்த அவர், பிரதம மந்திரி போஷன் திட்டத்தின்படி தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு 12 கிராம் புரதத்தை உள்ளடக்கிய 450 கலோரிகள் உணவும், தொடக்கப்பள்ளிகளுக்கு அடுத்த நிலை குழந்தைகளுக்கு 20 கிராம் புரதம் உள்ளிட்ட 700 கலோரி உணவும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு அளிப்பது குறித்த திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. அதேநேரம் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பால், முட்டை, பழங்கள் போன்ற கூடுதல் ஊட்டச்சத்து பொருட்களை தங்களது சொந்த நிதியிலிருந்து வழங்கி வருகின்றன” என்று பதில் அளித்துள்ளார்.

பெ. சூர்யா, நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்