நகைக்கடன் தள்ளுபடிக்கான பட்டியல் தயார்நிலையில்

0
296

தமிழக அரசு அறிவித்தபடி நகை கடன் தள்ளுபடிக்கான பயனாளிகள் பட்டியல் தயாராகிவிட்டது. வரும் 27ம் தேதி முதல் நகைகள் திருப்பி வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசமி தகவல்.

தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ சமுதாயத்தை சார்ந்த ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட மற்றும் வயதான மகளிருக்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி செய்தியாளரிடம் பேசுகையில்

தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் அறிவிக்கப் பட்டதன்படி கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் மற்றும் அதற்கு கீழ் நகைகளை அடமானமாக வைத்து கடன் பெற்றவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இதற்கான ஆய்வுகள் முடிவடைந்து தணிக்கைகள் முடிவடைந்து பட்டியல் தயாராக உள்ளது வருகின்ற 27.12.21 திங்கட்கிழமை முதல் பயனாளிகளுக்கு அவர்களுடைய நகைகள் திருப்பி வழங்கும் பணிகள் துவங்க உள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்