“இறைவனடி சேர்ந்தார்” ஐயா ப.அரியமுத்து..

0
148

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகேயுள்ள மேல புத்தனேரி கிராமத்தைச் சேர்ந்த, “சிறந்த தமிழ்ப் பற்றாளரும் ,மிகச் சிறந்த பகுத்தறிவாளருமான” ஐயா ப.அரியமுத்து அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.அவருக்கு வயது 73. ஐயா ப.அரியமுத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

“தொழிலதிபர்” அ.வீரமணி மற்றும் “கல்வியாளர் முனைவர்” அ. குணசேகர் ஆகியோரின் தந்தையான அவர், பல ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக பல்வேறு உதவிகளைச் செய்து அவர்களின் துயரைத் துடைத்துள்ளார்.

இவர் ஏழ்மையில் வாடும் பல குடும்பங்கள் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னேற்றம் அடைய பல்வேறு வகைகளில் உதவிகளைச் செய்து அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்துள்ளார்.சிறந்த சமூக சேவகராகவும் விளங்கியுள்ளார்.கிராமப்புற மேம்பாட்டிற்காக பல்வேறு இடங்களில் குரல் கொடுத்துள்ளார்.

எண்ணற்ற ஏழைக் குடும்பங்களின் திருமணத்தை நடத்தி வைத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.”ஆயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கிய கல்வியாளர் முனைவர்” அ. குணசேகர் அன்னாரின் புதல்வரே.

அன்னாரது இறுதிச் சடங்கு மேல புத்தனேரியில் உள்ள அவரது இல்லத்தில் நாளை வியாழக்கிழமை (31.03.22) பிற்பகல் 12 மணியளவில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்