குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மீண்டும் உருவானது

0
185

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தாய்லாந்து கடற்கரையில் உருவானது.

இன்று காலை 8:30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தாய்லாந்து கடற்கரையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவை ஒட்டிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நவம்பர் 15 ஆம் தேதிக்குள் நிலைகொள்ள வாய்ப்புள்ளது.

அது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில் ஆந்திரா கடற்கரையை அடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்