அம்பையில் அடிதடி மற்றும் கொலைமுயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

0
151

திருநெல்வேலி மாவட்டம் 14.09.2021 அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டவரான அம்பாசமுத்திரம் வட்டம், பிரம்மதேசம் பஞ்சாயத்துப்போர்டு தெருவைச்சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மகன் துரைச்சாமி என்ற சூர்யா ( வயது 26) என்பவர் அடிதடி மற்றும் கொலைமுயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு வந்தது.

மேற்படி நபரை பிரிவு-14 தமிழ்நாடு குண்டர் தடுப்புப்காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கையெடுக்க
அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் திரு சந்திரமோகன் அவர்களை அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்புப்காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்டக்காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில், இன்று சூர்யா குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்