சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்கு கொண்டு சென்ற நபர் கைது

0
191

சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்காக கொண்டு சென்ற நபர் கைது

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள்,போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இளஞ்சி பகுதி அருகில் சார்பு ஆய்வாளர் சண்முகவேல் ரோந்து பணியில் இருந்தபோது அங்கு விற்பனைக்காக மதுபாட்டில்களை வைத்திருந்த வல்லம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் சுரேஷ்குமார் (26) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 48 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்