ரஷ்யாவுக்கு எதிராக வன்முறை சார்ந்த கருத்துகளைப் பொதுமக்கள் தெரிவிக்கலாம் ; பேஸ்புக் அனுமதி

0
246

உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் குறித்து ரஷ்யாவுக்கு எதிரான விமர்சனங்களை பேஸ்புக்கில் முன் வைக்கலாம் என்ற அனுமதியை பேஸ்புக் நிறுவனம் வழங்கியுள்ளது .பேஸ்புக் நிறுவனத்திற்கு என்று ஒரு சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருக்கின்றது. அந்த விதிமுறைகளை மீறி எந்த ஒரு வன்முறை சார்ந்த பதிவுகளும் அதில் பதிவு செய்தால் உடனடியாக அந்த முகநூல் பக்கம் முடக்கப்படும். இது பேஸ்புக்கின் விதிமுறையாகும். உக்ரைன் ரஷ்யா போரில் எல்லை மீறி தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு எதிராக மற்ற சமூக வலைதளங்களில் மக்கள் தொடர்ச்சியாக பதிவு செய்து வருவதால் பேஸ்புக்கில் உள்ள சில விதிமுறைகளைத் தளர்த்தி ஃபேஸ்புக் நிறுவனம் வன்முறையான பேச்சுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் ரஷ்யாவுக்கு எதிராக வன்முறை சார்ந்த கருத்துக்களைப் பொதுமக்கள் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்