கடையத்தில் சிறிய அளவில் பேருந்து நிழற்குடை அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

0
157

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் கடையநல்லூர் ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தம், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி சார்பில் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆண்டுகளாக அரசு மருத்துவமனை அருகே பஸ் நிறுத்த நிழற்குடை இரு பகுதிகளிலும் வைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

அதன் அருகேயுள்ள வணிக நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பஸ் நிறுத்தத்தில் நிறுத்துவதால், நகரப்பேருந்து மற்றும் வெளியூர் அரசு பேருந்து வந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது

மேலும் செங்கோட்டை வி.கே புதூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் டவுன் பஸ் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நிறுத்துவதால், போலீசுக்கும் பஸ் ஊழியர்களுக்கும் தினசரி வாக்குவாதம் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது.

நேற்றைய தினம் பஸ் டிரைவர் மற்றும் காவல் ஆய்வாளர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை படம்பிடித்து, சமூக வலைதளங்களில் பரப்பியதால் மிகப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது எனவே மாவட்டநிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும், போக்குவரத்து துறையும், காவல்துறையும் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் டவுன் பஸ் பஸ்களை நிறுத்துவதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.

போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்ட நிழற்குடையை மாற்றிவிட்டு, சென்னை, மதுரை கோவை, நெல்லை போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டது போன்று சிறிய அளவில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்