தென்காசியில் குன்றும் குழியுமான பாதையால் பொதுமக்கள் அவதி

0
342

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் இரவணசமுத்திரம் ஊராட்சிப் பகுதிக்கு உட்பட்ட இரவணசமுத்திரம் – கோவிந்தப்பேரி செல்லக்கூடிய சாலை பல மாதங்களாக குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தில் பயணம் செய்ய மிகவும் சிரப்படுகின்றனர்.

இதனால் ஒருசில வயதான இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதோடு இந்தப் பகுதிக்கு புதிதாக வரக்கூடிய நபர்கள் நிலைதடுமாறி கீழேயும் விழுந்து விடுகின்றனர்.

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தினால் ஏற்பட்ட குழியையும் சரிவரமூடாத காரணத்தினால் பொதுமக்களின் உயிருக்கு பேராபத்து விளைவிக்கும் நிலையில் இருக்கின்றது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்