திருவான்மியூர் கொள்ளை நாடகத்திற்கு தூண்டியது ரம்மி விளையாட்டு

0
284

ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில் ஏற்பட்ட கடனை அடைக்கவே திருவான்மியூர் கொள்ளை நாடகம்- ரயில்வே டிஐஜி ஜெயகெளரி தகவல்.

இது தொடர்பாக சென்னையில் ரயில்வே டிஐஜி ஜெயகெளரி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது ஜெயகெளரி கூறியதாவது: ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர் ஊழியர் டீக்காரமனுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாடி தோற்றும் போயிருக்கிறார். இதனால் டீக்காராமுக்கு ஏகப்பட்ட கடன்கள் இருந்தன. அந்த கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்தார். அத்துடன் ஆன்லைனில் தொடர்ந்து ரம்மி விளையாடவும் கடன்களை சமாளிக்கவும் மனைவியுடன் சேர்ந்து கொள்ளை போய்விட்டதாக நாடகமாடியிருக்கிறார்.

அதிகாலையில் ரயில் நிலையத்துக்கு வந்த டீக்காராம் கவுண்ட்டரில் இருந்த ரூ1.32 லட்சம் பணத்தை மனைவியிடம் கொடுத்து அனுப்பி இருக்கிறார். அவரையே கட்டிப்போட்டுவிட்டு போகவும்சொல்லி சம்பவத்தை திசைதிருப்பி நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார். டீக்காராம் வீட்டில் இருந்து ரூ1.12 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்ய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ரயில்வே டிஐஜி ஜெயகெளரி தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்