இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்

0
455

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ஒரு விசைப்படகிலிருந்த 4 மீனவர்களையும், தனுஷ்கோடி தலைமன்னார் கடற்பகுதிக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 16 மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும், தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் இலங்கை கடற்படையினரைக் கண்டித்தும் ராமேஸ்வரம் மண்டபம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். மேலும் வரும் 26ம் தேதி ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இலங்கையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

“கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி சீரழிந்து வரும் இலங்கைக்கு இந்தியா அண்மையில் 7,500 கோடி நிதி உதவி அளித்ததை இலங்கை அரசு நன்றியுடன் நினைத்து கூட பார்க்கவில்லை” எனவும் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்