உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க குழு அமைத்தது தமிழக அரசு

0
182

உக்ரைனில் சிக்கித்தவிக்கும் மருத்துவ மாணவர்களை மீட்க முதல் அமைச்சர் தலைமையில் குழு அமைத்தது தமிழகஅரசு இதில்எம்பி திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி எம்பி, அப்துல்லா அடங்கிய 8 பேர் கொண்ட குழு அமைப்பு. குழுவில் ஐஏஎஸ் அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்புகுழு, ஹங்கேரி போலந்து ஸ்லோவாகியா ருமேனியா ஆகிய நாடுகளுக்குள் அடைக்கலம் புகுந்துள்ள தமிழ்நாட்டு மாணவர்களை பாதுகாப்பான வழியில் சிறப்பு விமானம் மூலம் அழைத்து வர அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். அங்குள்ள இந்திய தூதரங்களுடன் பேசி அழைத்துவரும் முயற்சியில் எம்பி திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி எம்பி, சட்டமற்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா, இவர்களுடன் 4 இந்திய ஆட்சிபணி அலுவலர்களும் இனைந்து செல்வார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்